தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கையில் வளர்ந்த மூக்கு!: ஆச்சரியத்தில் ஆழ்த்தும் மருத்துவதுறையின் சாதனை..!

கையில் வளர்ந்த மூக்கு!: ஆச்சரியத்தில் ஆழ்த்தும் மருத்துவதுறையின் சாதனை..!

French doctors have made a record by growing a nose from the hand of a woman who lost most of her nose due to cancer. Advertisement

புற்றுநோயின் தாக்கத்தால் மூக்கின் பெரும்பகுதியை இழந்த பெண்ணின் கையிலேயே மூக்கை வளரவைத்து முகத்தில் பொருத்தி சாதனை படைத்த பிரான்ஸ்  மருத்துவர்கள்.

பிரான்ஸில் உள்ள டௌலோஸ் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் நாசி குழி புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். புற்றுநோய்க்காக அவருக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை காரணமாக மூக்கின் பெரும்பகுதியை இழக்க நேர்ந்தது.

பல வருடங்கள் மூக்கின் பாதிப்பகுதி இல்லாமல் அந்த பெண் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் பிரான்ஸ் மருத்துவர்கள், அந்த பெண்ணின் கையிலேயே மூக்கை வளர்த்து, அதனை அவரக்கு பொருத்தி சாதனை படைத்துள்ளனர்.

3டி பிரிண்டிங் பயோமெட்டீரியல் முறைமூலம் மூக்கின் குருத்தெலும்பை உருவாக்கி அதை அந்த பெண்ணின் கையில் பொருத்தி, நெற்றிலியிலிருந்து தோல்பகுதியை எடுத்து அதில் வைத்து வளர்த்துள்ளனர்.

அந்த பெண்ணின் கையில் இந்த இணைப்பு மூக்கானது இரண்டு மாதங்கள் வளர்ந்துள்ளது. முழுதாக வளர்ந்த பின்னர் மருத்துவர்கள் முகத்தில் பொருத்தியுள்ளனர்.  
இந்த நிகழ்வு உலக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#nose #French Doctors #cancer #Nose in Hand
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story