கிட்னி ஆரோக்கியமாக இருக்க இந்த 5 பழங்களை சாப்பிட்டு பாருங்க..! செம ரிசல்ட் கிடைக்கும்..!!
கிட்னி ஆரோக்கியமாக இருக்க இந்த 5 பழங்களை சாப்பிட்டு பாருங்க..! செம ரிசல்ட் கிடைக்கும்..!!
சிறுநீரகம் என்பது நம் உடலில் உள்ள யூரியா போன்ற கழிவுகளை இரத்தத்திலிருந்து பிரித்து சிறுநீராக வெளியேற்ற உதவும் ஒரு உடல் உறுப்பாகும். இப்போது, இருக்கும் காலக்கட்டத்தில் பலருக்கும் சிறுநீரகத் தொற்று ஏற்படுகிறது. காரணம், சிறுநீரை அடக்கி வைத்துக் கொண்டு தகுந்த நேரத்தில் கழிக்காமல் இருப்பதால்தான் இந்த சிறுநீரகத் தொற்று மற்றும் சிறுநீரக கல் போன்ற பிரச்சனைகள் உருவாகிறது.
இந்த சிறுநீரகத் தொற்று சிறுநீர் கழிக்கும் போது அதிக வலியையும் எரிச்சலையும் ஏற்படுத்தும். ஆகையால், சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க நாம் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். அவ்வகையில், இந்த ஐந்து பழங்களுக்கு சிறுநீரகத் தொற்று மற்றும் சிறுநீரக கல் பாதிப்புகளை குணப்படுத்தும் தன்மை உள்ளது.
சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய பழங்கள் :
தினமும் மாதுளை பழம் சாறு எடுத்து ஒரு டம்ளர் அளவு குடித்து வர சிறுநீரக பாதையில் உள்ள கழிவுகளை வெளியேற்றும்.
இதையும் படிங்க: தினமும் பழங்கள் சாப்பிடுபவர்களா நீங்கள்? இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்..!
அதிக அளவு நீர்ச்சத்து நிறைந்துள்ள தர்பூசணி பழத்தை தினமும் சிறிது சாப்பிடுவதால் சிறுநீராக தொற்று குணமாகும். மேலும், வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ள எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்களை சாப்பிட்டு வருவதால் சிறுநீரக கல் பிரச்சனை நாளடைவில் குணமாகும்.
மேலும் ஸ்ட்ராபெரி, ப்ளூபெர்ரி போன்ற பழங்கள் சிறுநீரகத்தை சுத்தப்படுத்தி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், சிவப்பு திராட்சை பழத்தை அதன் விதையோடு சேர்த்து சாப்பிடும் போது சிறுநீரக கல் மற்றும் சிறுநீரகத் தொற்று போன்ற பிரச்சனைளை சரி செய்கிறது.
இதையும் படிங்க: மக்கானா ஆரோக்கியமானது மட்டுமல்ல.. ஆபத்தானதும் கூட.. உஷார்.!