×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தாய்ப்பாலுக்கு நிகரான தேங்காய் பால்: உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க..!

தாய்ப்பாலுக்கு நிகரான தேங்காய் பால்: உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகளை தெரிஞ்ச்சுக்கோங்க..!

Advertisement

தாய்ப்பாலுக்கு இணை தேங்காய் பால் பகிர்ந்து கொள்ளுங்கள். மக்கள் அறிந்து கொள்ளட்டும்! தேங்காய் உபயோகம் மாரடைப்பில் முடியும் என்று நிறைய பேர் கைவிட்டனர். உண்மை இதோ, பச்சை தேங்காயின் பயன்கள்:

பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான். ஆனால், எப்பொழுது கொழுப்பு உருவாகுமென்றால், அதை சமைக்கும் போதுதான் தேங்காய் கொழுப்பாய் மாறும்! தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால், அதுதான் அமிர்தம்.

சகலவிதமான நோய்களையும் குணமாகக்கும். உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும். இரத்தத்தை சுத்தமாக்கும்.உடலை உரமாக்கும். உச்சிமுதல் பாதம்வரை உள்ள உடல் உறுப்புகளை புதுப்பிக்கும்!

தேங்காய்க்கும் நமக்கும் உள்ள ஒற்றுமை: நாம், அன்னை வயிற்றிலிருந்து பூமிக்குவர 10 மாதம். அதுபோல தேங்காய் கருவாகி பூமிக்கு வர 10 மாதம் ஆகும். இனி முடிந்த அளவு தேங்காயை பச்சையாக உண்போம்

தேங்காயில் உள்ள கொழுப்பு ஹைப்பர் லிப்பிடிமியா மற்றும் இதய நோய்களுடன் தொடர்புடையதாக உள்ளது என்று பலர் நம்புகின்றனர். ஆனால் இது தவறான விஷயம் எனக் கூறப்படுகிறது.

 அதுமட்டுமல்லாமல் தேங்காயில் உள்ள கொழுப்பு கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை கூட்டுகிறது. எனவே இது இதயத்திற்கு பாதுகாப்பானதும் கூட. இதற்கு முக்கிய காரணம் தேங்காயில் உள்ள கோக்கொசைன் என்ற பொருள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் வேலையை செய்கிறது.

அம்லைடு பிளக் என்பது ஒரு விதமான புரோட்டீன் ஆகும். இந்த புரோட்டீன் மூளையில் உள்ள நரம்பு செல்களுக்கு இடையே குவிந்து அந்த நரம்பு செல்களை சாகடித்து விடும். இதனால் நினைவின்மை ஏற்பட்டு மறதி ஏற்பட ஆரம்பித்து விடும். ஆனால் தேங்காயில் உள்ள ஆக்ஸினேற்றிகள் இந்த அம்லைடு புரதத்திற்கு எதிராக செயல்பட்டு மூளையில் உள்ள நரம்பு செல்களை பாதுகாக்கிறது. இதே போன்று இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகளும் மூளையின் நரம்பு செல்கள் அழிவதை தடுக்கிறது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

தாய்ப்பாலில் இருக்கும் மோனோலாரின் சக்தி தேங்காயை தவிர வேறெதிலும் இல்லை என்பதுதான் உண்மை.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Coconut #Blood Circulation #Coconut Milk #Cholesterol #Mothers milk
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story