மாதவிடாய் கழிவுகளில்.. மருந்துகள்... மருத்துவ உலகை புரட்டிபோடப்போகும் சீன ஆய்வு.!
மாதவிடாய் கழிவுகளில்.. மருந்துகள்... மருத்துவ உலகை புரட்டிபோடப்போகும் சீன ஆய்வு.!
இதுநாள் வரை கழிவாக கருதப்பட்டுவந்த மாதவிடாய் இரத்தம் இன்று மருத்துவ உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் உடல் மாதந்தோறும் வெளியேற்றும் இந்த இரத்தம், உயிரை மீண்டும் உருவாக்க கூடிய திறன் கொண்டது என்று சமீபத்திய விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (University of Science and Technology of China) மற்றும் பல ஆய்வு நிறுவனங்களின் விஞ்ஞானிகள், மாதவிடாய் இரத்தத்தில் 1000-கும் மேற்பட்ட வகையான புரதங்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதில் பல புரதங்கள் சாதாரண இரத்தத்தில் காணப்படாது. அவை, கர்ப்பப்பையின் உட்புற அடுக்கு (endometrium) மட்டுமே உருவாக்கும் தனித்துவமானவையாகும்.
இந்த இரத்தத்தில் ஸ்டெம் செல்கள் (Stem Cells), சைடோகைன்கள் (Cytokines) மற்றும் வளர்ச்சி காரணிகள் (Growth Factors) உள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து செல் வளர்ச்சி, திசு புதுப்பிப்பு, மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி சமநிலையை பேணும் பணியைச் செய்கின்றன.
மாதவிடாய் இரத்தத்திலிருந்து பெறப்படும் செல்கள் தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்ளும் திறன் (Self-renewal) கொண்டவை. மேலும், அவை எலும்பு, நரம்பு, இதயம் போன்ற பல்வேறு திசுக்களாக (Tissue types) மாறும் திறனும் கொண்டுள்ளன. அதாவது, பெண்களின் உடல் மாதந்தோறும் வெளியேற்றும் இந்த கழிவு இரத்தம், உடலை மீண்டும் உருவாக்கும் சக்தியையும் தன்னுள் கொண்டுள்ளது. இதனால் மாதவிடாய் இரத்தம் தற்போது மருத்துவ (Regenerative Medicine) துறையில் முக்கியமான ஆய்வு பொருளாக மாறியுள்ளது.
எதிர்காலத்தில் இதன் மூலம் இதய நோய்கள், நரம்பு சிதைவு (Neurodegenerative Diseases), எலும்பு சேதம் போன்றவற்றுக்கான சிகிச்சைகள் உருவாகலாம். அதுவும், அறுவை சிகிச்சையில்லாமல் (Non-invasive Therapy) சிகிச்சையளிக்க முடியும் என்று நம்பப்படுகிறது. பெண்களின் உடல் பெரும்பாலும் அறிவியல் ஆய்வுகளில் புறக்கணிக்கப்பட்டிருந்தாலும், இப்போது அது தனது அருமையை உலகுக்குக் காட்டி யுள்ளது. ஒவ்வொரு மாதமும் தன்னை மறுஉருவாக்கம் செய்யும் பெண்களின் உடல், இயற்கையால் அளிக்கப்பட்ட ஒரு அற்புத வடிவமைப்பு என்பதை இந்த ஆய்வுகள் உணர்த்துகின்றன.