×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிரான்சில் இளவரசி டயானாவின் காதலன் மரணம்

princess-diana lover death

Advertisement

 

பிரித்தானிய நாட்டின்  இளவரசியான டயானாவின் காதலர் மிகவும் கவர்ச்சியானவர் என்று அழைக்கப்படும் அவர் ஒரு கலைப் பொருட்கள் விற்பனையாளரான Oliver Hoare தனது பிரான்ஸ் வீட்டில் தனது 73ஆவது வயதில் மரணமடைந்தார்.

இவர் ஏற்க்கனவே  திருமணம்  அனாவர் , டயானாவைவிட 16 வயது மூத்தவரும், இளவரசர் சார்லசின் நெருங்கிய நண்பர் ஆவர்  Oliver Hoareக்கும் டயானாவுக்கும்  ஆரம்பத்தில் உறவு மலர்ந்ததாகவும், ஆனால் அதை Oliver வெளிப்படையாக ஒப்புக் கொண்டதில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டயானா தனது காரின் பின் பக்கத்தில் Oliverஐ மறைத்து வைத்து அரண்மனைக்கு கடத்தி வருவார் என்றும், ஒரு முறை அவர் தப்பிச் செல்ல முயலும்போது நள்ளிரவில் அரண்மனை பாதுகவலர்களிடம் அரை நிர்வாணமாக சிக்கியதாகவும் தெரிகிறது.
ஆனால் தனது மனைவியை பிரிய மனமற்ற Oliver இந்த உறவிலிருந்து வெளியேற முயன்றதாகவும், இதனால் அவரது வீட்டுக்கு அடிக்கடி போன் செய்து டயானா தொந்தரவு செய்ததாகவும், இதனால் எரிச்சலுற்ற Oliverஇன் மனைவியின் வற்புறுத்தலின் பேரில் அவர் பொலிசாரிடம் புகாரளித்ததாகவும், சுமார் 300 போன் கால்களை பொலிசார் ட்ரேஸ் செய்ததாகவும், பின்பு Oliver கேட்டுக் கொண்டதின் பேரில் இந்த விடயம் தொடர்பான விசாரணையை பொலிசார் முடித்துக் கொண்டதாகவும் தெரிகிறது.

பின்னர் டயானாவும் பேட்டி ஒன்றில் தான் Oliverஐ அவ்வப்போது அழைப்பதுண்டு என்றும் ஆனால் தொந்தரவு செய்யுமளவிற்கு அல்ல என்றும் தெரிவித்தார்

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news #Tamil Spark #Tamil news updates
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story