உல்லாசத்திற்கு தடையாக இருந்த கணவன்.. தடையமே இல்லாமல் முடித்த மனைவி!
உறவுக்கு தடையாக இருந்த கணவன்.. தடையமே இல்லாமல் முடித்த மனைவி!
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் என்பவருக்கு சந்தியா என்ற மனைவி இருந்துள்ளார். இதில் சந்தியா தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். அங்கு அதே மருத்துவமனையில் பணிபுரியும் அனில் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இதனிடையே சந்தியாவின் கணவர் பிரசாந்த் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட சந்தியா தனது கள்ளக்காதலனை அடிக்கடி வீட்டுக்கு வரவைத்து சந்தோஷமாக இருந்துள்ளார். இதனால் சந்தியா தனது கணவரை மறந்து கள்ள காதலனுடன் முழு வாழ்க்கையையும் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் பிரசாந்த் சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் அவரது மனைவியின் நடத்தை குறித்து கூறியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த பிரசாந்த் தனது மனைவியிடம் தகாத உறவை கைவிடும்படி கடுமையாக கண்டித்து வந்துள்ளார். இதனால் சந்தியா சில நாட்களாக தனது கள்ளக்காதலனை சந்திக்காமல் இருந்துள்ளார்.
இதையும் படிங்க: இளம்பெண்ணுக்கு சித்தப்பா மேல் மோகம்... கணவனுக்கு ஸ்கெட்ச்.. சினிமாவை மிஞ்சிய கொடூரம்.!
இதனிடையே தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனை போட்டுத் தள்ள திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி அதே பகுதியை சேர்ந்த வெங்கட் சாய் என்பவரை சேர்த்துக்கொண்டு கடந்த ஜூன் 29ஆம் தேதி பிரசாந்துக்கு அதிக அளவில் மது குடிக்க வைத்து வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தள்ளி விட்டுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த பிரசாந்த் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அதன் பின்னர் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், பிரசாந்துக்கு மயக்க ஊசி போட்டும், கொடூரமாக தாக்கியும் துடி, துடிக்க வைத்து கொலை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தனது கணவர் மாடியில் விழுந்த அதிர்ச்சியில் தான் உயிரிழந்ததாக சந்தியா அக்கம், பக்கத்தினரிடம் கூறியுள்ளார். ஆனால் பிரசாந்தின் தாயார் தனது மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் சந்தியா மற்றும் அவரது கள்ளக்காதலன் அனிலிடம் மேற்கொண்ட குறுக்கு விசாரணையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சந்தியா, அனில் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த வெங்கட் சாய் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.