பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா பாதிப்பு! மருத்துவமனையில் அனுமதி!
corona possitive for cp radhakrishnan

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் ஆரம்பத்திலிருந்து அரசு ஊழியர்கள், சுகாதாரப்பணியாளர்கள், தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் ,என பல்வேறு தரப்பில் களத்தில் இறங்கி உதவி செய்து வருகின்றனர்.
இந்தநிலையில், களத்தில் பணியாற்றும் நபர்களுக்கு கொரோனா உறுதியாகி வந்தது. கொரோனா தொற்றால் சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய, மாநில அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது முகநூல் பதிவில் கூறுகையில், நான் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் எனக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளேன். உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்களால் நான் மிக விரைவில் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்புவேன் என தெரிவித்துள்ளார்.