ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2018. செம்பருத்தி சீரியல் பார்வதி மற்றும் ஆதிக்கு என்ன விருது கிடைத்தது தெரியுமா?
Zee tamil 2018 awards winners list
தமிழில் வளர்ந்துவரும் தொலைக்காட்சி நிறுவனங்களில் ஓன்று ஜீ தமிழ். மிகவும் தரமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிவருகிறது ஜீ தமிழ் நிறுவனம். இதில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை ரசிகர்களாக உள்ளனர்.
அந்தவகையில் ஜீ தமிழ் குடும்ப விருதுகள் வழங்கும் விழா சனிக்கிழமை (13/10/18) மாலை சென்னை நந்தனத்தில் வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. இந்த விழாவில் நடிகர்கள் சத்யராஜ், விஷால், இயக்குநர் அட்லி, நடிகைகள் அமலா பால், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். அதில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளிலும் யார் சிறந்த நடிகை, வில்லி போன்ற பல பிரிவுகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
சபானா
இன்று பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருப்பவர் சபானா. ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி என்ற சீரியலில் கதாநாயகியாக நடிப்பவர்தான் சபானா. இந்த தொடர் மாபெரும் வெற்றி அடைய சபானாதான் காரணம். ஜீ தமிழின் சிறந்த கதாநாயகிக்கான விருது நடிகை சபானாக்கு வழங்கப்பட்டது.
ஸ்ரீ
சிறந்த ஹீரோவாக `யாரடி நீ மோகினி’யில் நடித்துவரும் ஸ்ரீ தேர்ந்தெடுக்கப்பட்டார். ஊர்வம்பு லக்ஷ்மி. செம்பருத்தி தொடரில் வனஜா கேரக்டரில் வந்து பார்வதியைப் பாடாய் படுத்திக்கொண்டிருக்கும் ஊர்வம்பு லக்ஷ்மிக்கு, சிறந்த வில்லிக்காக விருது வழங்கப்பட்டுள்ளது.
கார்த்திக் - சபானா, தினேஷ் - ரேஷ்மா
சிறந்த ஜோடிக்கான விருது இரண்டு ஜோடிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. செம்பருத்தி ஆதி - பார்வதி மற்றும் பூவே பூச்சூடவா சிவா - சக்தி இரண்டு ஜோடிகளும் இந்த விருதைப் பெற்றனர்.