யாரும் எதிர்ப்பாராத சூப்பர் கூட்டணியில் முதன் முறையாக இணைந்த யுவன்! ஹீரோ யார் தெரியுமா?
Yuvan sankar raja with SJ Surya

தென்னிந்திய அளவில் பிரபலமான இசை அமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா. இவர் இசை அமைத்த பல்வேறு பாடல்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இவரது இசையால் வெற்றிபெற்ற படங்கள் கூட ஏராளம் எனலாம். சமீபத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான மாரி படத்தில் வந்த ரௌடி உலகளவில் சாதனை படைத்தது.
இவரது இசையமைப்பில் கடைசியாக வந்த நேர்கொண்ட பார்வை படம் கூட செம்ம ஹிட் அடித்தது.இந்நிலையில் யுவன் தற்போது முதல் முறையாக இயக்குனர் ராதாமோகனுடன் கைக்கோர்த்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. இப்படத்தில் ஹீரோவாக எஸ்.ஜே.சூர்யா நடிக்க உள்ளாராம்.
இப்படத்தின் பூஜை இன்று சிறப்பாக தொடங்கிய நிலையில் இந்த படம் முழுக்க முழுக்க மியூஸிக் கலந்த த்ரில்லர் படமாக உருவாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். முதல் முறையாக இணைந்துள்ள இந்த கூட்டணி வெற்றிபெற நமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வோம்.