×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

யூடிபர் இலக்கியா தற்கொலை முயற்சி?? என் சாவிற்கு அவர்தான் காரணம்.! பகீர் குற்றச்சாட்டால் அதிர்ச்சி!!

யூடிபர் இலக்கியா தற்கொலை முயற்சிக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் விளக்கமளித்துள்ளார்.

Advertisement

டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் அரைகுறை ஆடையுடன் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து பிரபலமடைந்தவர் இலக்கியா. அவர் தற்போது சமையல் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார் அண்மையில்தான் இலக்கியா காட்டுப்பாக்கம் பகுதியில் புதிதாக வீடு கட்டி கிரகபிரவேசம் செய்தார்.

இந்நிலையில் அவர் நேற்று முன்தினம், என்னோட சாவுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மட்டும்தான் காரணம். 6 வருடங்களாக நான் அவன் கூட இருந்திருக்கேன். என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டான். அவருக்கு
நிறைய பொண்ணுங்ககூட பழக்கம் இருக்கிறது. அதைத் தட்டிகேட்டால் என்னை போட்டு அடிக்கிறான். நானும் பொறுத்து பொறுத்து பார்த்தேன். என்னால் முடியவில்லை. இதை நான் போட்டாலும் என்னை போட்டு அடிப்பான் என குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இலக்கியா அந்த பதிவை உடனே டெலிட் செய்து விட்டார். இதனை எடுத்து அவர் அதிக அளவு மது அருந்தி, ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டு மயக்கம் அடைந்துள்ளார். பின்னர் உடன் இருந்தவர்கள் அவரை போரூரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் இலக்கியா தற்கொலை முயற்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதில் தன்னை சம்பந்தப்படுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 3 ஆண்டுகள் பாலியல் சித்திரவதை... நிர்வாண படங்கள் காட்டி மிரட்டல்.!! பி.டெக் மாணவிக்கு நேர்ந்த சோகம்.!!

இதையும் படிங்க: "வீடியோவை டெலிட் பண்ணு.. காசு தரேன்." insta பிரபலத்திடம் நடிகை நயன்தாரா பேரம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Youtube #Ilakkiya #suicide
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story