ஏ.ஆர் ரகுமான் இளம் இசைக் கலைஞர்களுக்கு பயிற்சி; மகிழ்ச்சியில் தேர்வானவர்கள்.!
youth music artist training from a.r raguman
வளரும் இசைக் கலைஞர்களுக்கு ஏ.ஆர் ரகுமான் பயிற்சி அளிக்க உள்ளதால் இப்பயிற்சிக்கு தேர்வானவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாருதி சுசூக்கி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள நெக்ஸா மியூஸிக் தளத்தில் இளம்பாடகர்கள் தங்களது பாடல்கள், வரிகள், பின்னணி இசை ஆகியவற்றை பதிவேற்றிக் கொள்ளலாம். இந்த பாடல்களை பதிவு செய்துகொண்டு ஆன்லைனில் கேட்கலாம். இதற்கு இசை பிரியர்களிடம் இருந்து பெரும் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இந்த இளம் இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும்வகையில் இவர்களுள் தேர்வானவர்களுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் இசைக் கலைஞர் கிளிண்டன் செரேஜியோ ஆகியோர் விரைவில் பயிற்சி அளிக்க உள்ளனர்.