பிக் பாஸ் சீசன் மூன்றில் பிரபல இளம் நடிகை! மகிழ்ச்சியில் ரசிகர்கள்! யார் அந்த நடிகை தெரியுமா?
Young actress shanthini in bigg boss season three

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வரும் ஜூன் 23ம் தேதி துவங்குகிறது. முதல் இரண்டு சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்தான் மூன்றாவது சீசனிலும் தொடர்கிறார். மேலும் சீசன் மூன்றில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பற்றிய விவரங்கள் தினமும் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிரபல இளம் நடிகை ஒருவர் பிக் பாஸ் சீசன் மூன்றில் கலநதுகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அவர் வேறு யாரும் இல்லை, நடிகை சாந்தினிதான். நடிகர் பாக்யராஜ் மகன் சாந்தனு நடித்த சித்து+2 (2010) படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அதன் பின்னர் நான் ராஜாவாகப் போகிறேன் (2013) என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
தற்போது அடுத்ததடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை சாந்தினி. இந்நிலையில் இவர் பிக் பாஸ் சீசன் மூன்றில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரபூர்வ தகவல்களும் வெளியாகவில்லை.