திருமண தேதியை அறிவித்த நடிகர் யோகிபாபு! மணபெண் யார் தெரியுமா?
Yokibabu marriage date

தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பிரபலமாக நடித்து வரும் காமெடி நடிகர் தான் யோகிபாபு. இவர் அஜித், விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
இவரின் திருமணம் பற்றிய பல வதந்திகள் சமீபகாலமாக சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக யோகிபாபு தான் வீட்டில் அப்பா, அம்மா பார்க்கும் பெண்ணை மட்டுமே திருமணம் செய்யவிருப்பதாக கூறினார்.
இந்நிலையில் தற்போது பார்கவி என்ற சாதரண குடும்பத்தை சேர்ந்த பெண்ணை தனக்கு பெண் பார்த்திருப்பதாகவும், வரும் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் தங்களது திருமணம் நடைப்பெறயிருப்பதாகவும் புதிய தகவல் ஒன்றை நடிகர் யோகிபாபு கூறியுள்ளார்.