×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

யோகி நீங்க வேற லெவல்... ஷாருக்கானுடன் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு.! இயக்குனர் யார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து, தனது காமெடியால்

Advertisement

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து, தனது காமெடியால் ரசிகர்களை அசர வைத்த கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம் வரிசையில் தற்போது முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் யோகிபாபு. இவர் ஆரம்ப காலத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிலையில், தனது விடாமுயற்சியாலும், திறமையாலும் காமெடி நடிகராக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த யோகிபாபு தற்போது முன்னணி ஹீரோவாகவும் அவதாரமெடுத்துள்ளார்.

இந்தநிலையில், தற்போது ஹீரோவாக, காமெடி நடிகராக யோகிபாபு கைவசம் பல படங்கள் உள்ளன. அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கவுள்ள புதிய படத்தில் யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அட்லி தற்போது ஷாருக்கான் நடிக்கும் ஹிந்திப் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

மேலும், ஷாரூக்கான் படத்தில் பல்வேறு தென்னிந்திய நடிகர்களையும் நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளார் அட்லி. அதில் முதலாவதாக ஷாரூக்கானுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் யோகி பாபுவை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.  படம் முழுவதும் யோகிபாபுவிற்கு ஷாருக்கானுடன் வரும் கதாபாத்திரம் என கூறப்படுகிறது. 

இந்தப் படம் ஹிந்தி மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியாகவுள்ளது. தமிழ் பதிப்பில் மட்டும் யோகி பாபு நடிக்கிறாரா அல்லது மற்ற மொழி பதிப்பிலும் நடிக்கிறாரா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#yogibabu #Sharukhan
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story