அந்த இடத்திற்கு அஜித்தை அழைக்கும் யாஷிகா! ஏம்மா இந்த வேலை? வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
Yashika wants ajith to join twitter

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 இவரை தமிழ் திரையுலகில் மேலும் பிரபலமடைய செய்தது. தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிறார் யாஷிகா.
இந்நிலையில் தல அஜித்துக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார் யாஷிகா. பொதுவாக தல அஜித் பொது நிகழ்ச்சிகள், மேடை பேச்சு, சமூக வலைத்தளங்கள் இவற்றை தவிற்பவர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஓன்று.
இப்படி இருக்க, தல அஜித் ட்விட்டரில் சேர வேண்டும் என அஜித்துக்கு கோரிக்கை வைத்துள்ளார் நடிகை யாஷிகா. மேலும், தன்னைப்போல் அஜித் சார் ட்விட்டரில் சேரவேண்டும் என யாரெல்லாம் ஆசைப்படுகிறீர்கள் என ரசிகர்களிடம் கேள்வியும் எழுப்பியுள்ளார். அதற்கு தற்போதுவரை 3000 பேர் பதில் ட்விட் போட்டுள்ளனர்.