மாணவர்களுடன் சேர்ந்து யாசிக்க ஆனந்த் செய்துள்ள சர்ச்சை காரியம்! வைரலாகும் புகைப்படம்!
Yashika anandth put autograph in currency note

தமிழில் வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை யாஷிகா ஆனந்த். யாரும் எதிர்பாராத வகையில் மாபெரும் வெற்றிபெற்றது இந்த திரைப்படம். இதைத்தொடர்ந்து கவுதம் கார்த்தி நடிப்பில் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது யாஷிகாவிற்கு.
இதில் சற்று வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் யாஷிகா. இதை பார்த்த பலரும் யாஷிகாவிற்கு ரசிகர்கள் ஆனார்கள். ஒரே நைட்டில் பிரபலாமானார் யாஷிகா. பல்வேறு டிவி சேனல்கள், வலைத்தளங்களுக்கு பேட்டி கொடுத்தார் யாஷிகா. இவரது புகழை பார்த்த விஜய் டிவி பிக் பாஸ் சீசன் இரண்டில் பங்கேற்கும் வாய்ப்பை வழங்கியது.
சமீபத்தில் நடிகை யாஷிகா தீம் பார்க் ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கே வந்திருந்த சில மாணவர்கள் யாஷிகாவிடம் புகைப்படம் எடுத்துக்கொண்டதோடு அவரிடம் ரூபாய் நோட்டுக்களில் ஆட்டோக்ராப்பையும் வாங்கியுள்ளனர். இந்த விஷயம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
ரூபாய் நோட்டுக்களில் கையப்பம் போடுவது குற்றம் என்று இருக்கையில் அதனை அறியாது யாஷிகா செய்துள்ள இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியள்ளது.