இந்த நடிகரை திருமணம் செய்ய ஆசை! ஓப்பனாக கூறிய யாஷிகா ஆனந்த்! யார் தெரியுமா?
Yashika anandh talks about her crush actor
இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை யாஷிகா அனந்த். இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியான, வித்தியாசமான கதாபாத்திரம் என்றாலும் ஒரே படத்தில் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார் யாஷிகா. அதன்பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் நடிகர் மஹத்தை காதலிப்பதாக கூறி சர்ச்சையில் சிக்கினாலும், பிக் பாஸ் நிகழ்ச்சி இவரை மேலும் பிரபலமடைய செய்தது. தற்சமயம் கைவசம் பல படங்கள் வைத்துள்ளார் யாஷிகா.
சமூக வளைத்தலங்களில் அவ்வப்போது மிகவும் வெளிப்படையாக பேசும் இவர் தற்போது தன் சொந்த வாழ்க்கை பற்றி தற்போது பேசியுள்ளார். நான் இன்னும் சிங்கிள் தான் என கூறியுள்ள அவர், தற்போது தெலுங்கு நடிகர் விஜய் தேவர்கொண்டாவை திருமணம் செய்ய ஆசை என கூறியுள்ளார்.
”ஆனால் சின்ன வயதில் நடிகர் சூர்யாவை திருமணம் செய்ய் ஆசை இருந்ததாகவும், தற்போது அவர் மீது அதிக மரியாதை உள்ளது” எனவும் கூறியுள்ளார் யாஷிகா. மேலும் பாய் பிரென்ட் உடன் திருமணம் முடிந்த பிறகு சுவிட்சர்லாந்துக்கு செல்ல வேண்டும் என ஆசை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.