×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஐயோ.. இவ்வளவு பெரிய காயமா? தையல் போட்ட வீடியோவை வெளியிட்ட யாஷிகா! செம ஷாக்கான ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவருமான ய

Advertisement

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவருமான யாஷிகா கடந்த சில வாரங்களுக்கு முன்பு  மாமல்லபுரத்தில் இருந்து காரில் சென்னை திரும்பிய போது சூலேரிக்காடு என்ற பகுதியில் பெரும் விபத்தில் சிக்கினார்.

இதில் யாஷிகா மற்றும் அவரது ஆண் நண்பர்கள் இருவருக்கு பயங்கர காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். மேலும் அந்த விபத்தில் யாஷிகாவின் உயிர்தோழியான வள்ளிஷெட்டி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையில் யாஷிகாவின் உடலில் முதுகு மற்றும் கால் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் அவருக்கு மூன்று சர்ஜரிகள் நடைபெற்றதாக தகவல் வெளிவந்தது.

மேலும் யாஷிகா காலில் பெரிய கட்டுடன் இருக்கும் புகைப்படத்தையும் அண்மையில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் அவர் தனது காயத்திற்கு மிகப்பெரிய தையல் போட்டுள்ள வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் விரைவில் குணமடைந்து மீண்டு வருவீர்கள் என யாஷிகாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#yashika anand #accident #Stitching
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story