×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கர்நாடகா: நடிகரின் பிறந்தநாளுக்கு கட் அவுட் வைத்த ரசிகர்கள் 3 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு...

கர்நாடகா: நடிகரின் பிறந்தநாளுக்கு கட் அவுட் வைத்த ரசிகர்கள் 3 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு...

Advertisement

கர்நாடகாவில் யஷ் என்ற நடிகரின் பிறந்தநாளை கட் அவுட் வைத்து கொண்டாடிய ரசிகர்கள் 3 பேர் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

கர்நாடகாவில் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் யஷ். இவர் நடிப்பில் வெளியான கேஜிஎப் திரைப்படம் இவரை இந்தியா முழுவதும் பிரபலமடைய வைத்தது. இந்நிலையில் நேற்று நடிகரின் யஷின் பிறந்தநாள் என்பதால் அதனை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி உள்ளனர்.

கடக் மாவட்டத்தில் உள்ள யஷ் ரசிகர்களான ஹனமந்த ஹரிஜன், முரளி, நவீன் காஜி உள்பட 10 பேர் யஷின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அவருக்கு கட் அவுட் வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது எதிர்பாராத விதமாக கட் அவுட்டானது அங்கிருந்த மின்சார கம்பியில் பட்டுள்ளது. 

அதில் மின்சாரம் பாய்ந்து ஹனமந்த ஹரிஜன், முரளி, நவீன் காஜி ஆகிய 3 ரசிகர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மற்ற நபர்கள் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#karnataka #Yash fans #Cutout #died
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story