வலிமை படத்தில் தல அஜித்துக்கு ஜோடி இந்த நடிகையா? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!
yamigautham act as heroine in valimai movie

தமிழ்சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் தல அஜித். இவருக்கென ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவருக்கென மாபெரும் நடிகர், நடிகையர்களே பெரும் ரசிகர்களாக உள்ளனர். அவருடன் சேர்ந்து நடிக்கவும் பல நடிகைகளும் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு அஜித் நடித்த இரண்டு படங்களும் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து அவர் மீண்டும் போனிகபூர் தயாரிப்பில் ஹெச் வினோத்துடன் கூட்டணியில் இணைந்து வலிமை படத்தில் நடிக்கஉள்ளார். மேலும் அவர் அதற்காக தனது கெட்டப்பையும் மாற்றியுள்ளார். இந்நிலையில் வலிமை திரைப்படத்தில் அஜித் இரு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும், அதில் ஒன்று போலீசாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.