×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"ஓரம்போ..." தளபதி விஜய் தன்னோட அம்மாவை சைக்கிளில் உட்கார வைத்து ஓட்டிய... அபூர்வமான வைரல் புகைப்படம்.!

ஓரம்போ... தளபதி விஜய் தன்னோட அம்மாவை சைக்கிளில் உட்கார வைத்து ஓட்டிய... அபூர்வமான வைரல் புகைப்படம்.!

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ஓய்விற்காக துபாய் சென்றிருக்கிறார்.

ஓய்விற்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கும்  தளபதி 68 திரைப்படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். மேலும் அரசியலில் விஜய் களம் இறங்க இருப்பதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு முன்னோட்டமாகவே சமீபத்தில் சில நிகழ்ச்சிகள் விஜய் மக்கள் இயக்கத்தினரால் நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தளபதி 68 திரைப்படத்திற்கு பிறகு விஜய் ஒரு பிரேக் எடுக்க இருக்கிறார் எனவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதனைப் பற்றிய உறுதியான முடிவு எதுவும் இல்லை. இந்நிலையில் அரிதான புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.

நடிகர் விஜய் தனது தாய் ஷோபா மீது அதிகமான பாசம் கொண்டவர் என்பது நாம் அறிந்ததே. சிறுவயதில் அவரது தாயை சைக்கிளுக்கு பின்னால் அமர வைத்து  விஜய் சைக்கிள் ஓட்டுவது போன்ற புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. தளபதி ரசிகர்களும் இதை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil cinema #Kollywood #thalapathy vijay #Shobha #rare picture.
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story