×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒரே கொஞ்சல்... குலாவள் தான்... VJ அஞ்சனா ரங்கன் கணவருடன் உள்ள நெருக்கமான புகைப்படம் இதோ...

தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் கணவருடன் உள்ள ரொமான்டிக் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாக

Advertisement

தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் கணவருடன் உள்ள ரொமான்டிக் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவி மற்றும் சன் மியூசிக் போன்ற சேனல்களில் தொகுப்பாளினியாக சில வருடங்கள் பணியாற்றி பிரபலமானவர் அஞ்சனா ரங்கன். இவர் பிரபல நடிகர், நடிகைகளை பேட்டி எடுப்பது மற்றும் படம் பற்றிய தகவல்களை கலந்துரையாடுவது போன்ற பணியை செய்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர்.

அதிலும் இவர் நடத்திய நீங்களும் நாங்களும் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார். அதுமட்டுமின்றி விருது விழாக்களை தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு தொகுப்பாளினியாக அஞ்சனா பணியாற்றியவர்.

பின்னர் கயல் பட நடிகர் சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், வித விதமாய் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது கருப்பு பனியனில் கணவருடன் நெருக்கமாக உள்ள புகைப்படம் ஒற்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி  வருகிறது. இதோ அந்த புகைப்படம்...

 

 

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story