தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அவரை ரொம்ப மிஸ் செய்கிறேன்.! வேதனையோடு விஜே அஞ்சனா வெளியிட்ட உருக்கமான பதிவு.! ஆறுதல் கூறும் ரசிகர்கள்!!

அவரை ரொம்ப மிஸ் செய்கிறேன்.! வேதனையோடு விஜே அஞ்சனா வெளியிட்ட உருக்கமான பதிவு!! ஆறுதல் கூறும் ரசிகர்கள்!!

vj-anjana-post-about-her-father-in-law Advertisement

பிரபல சன் மியூஸிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி  பெருமளவில் பிரபலமானவர் விஜே அஞ்சனா. ரசிகர்களின் பேவரைட் தொகுப்பாளினியாக இருந்த அவர் விருது வழங்கும் விழாக்கள், ஆடியோ ரிலீஸ் விழாக்கள் போன்றவற்றையும் தொகுத்து வழங்கினார். 

அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு கயல் பட ஹீரோவான சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ருத்ராக்ஷ் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் அண்மையில் அஞ்சனாவின் கணவரின் அப்பா சுப்ரமணியன் காலமானார். அவரது இறுதிச் சடங்கில்  அஞ்சனா கதறி அழுத வீடியோ வைரலாகி பலரையும் கண்கலங்கவைத்தது.

இந்த நிலையில் அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனது மாமனார் குறித்து மிகவும் உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், நான் 10 வயதிலேயே எனது தந்தையை இழந்துவிட்டேன். அந்த இடத்தை எனது மாமனார் பூர்த்தி செய்தார். தற்போது அவரையும் இழந்துவிட்டேன்.

anjana

எங்களுக்குள் ஆரோக்கியமான கருத்து வேறுபாடுகள் இருக்கும். ஆனால் அதனை தாண்டி அழகான அன்பு, தந்தை மற்றும் மகளுக்கான அழகான பந்தமும் இருந்தது. அதனை வார்த்தைகள் விவரிக்க முடியாது. எங்களுக்கு மட்டுமே அது புரியும். ஆனால் தற்போது அவரை இழந்து தவித்து கொண்டிருக்கிறேன். எனது இதயத்தின் ஒருபகுதி அவரை எப்பொழுதும் மிஸ் செய்து கொண்டு இருக்கும். அதன் வலியும் நிரந்தமாக இருக்கும் என கூறியுள்ளார். இந்நிலையில் நெட்டிசன்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#anjana #Father in law #Passed away
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story