×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஊரே கொண்டாடுகிறார்கள்.! ஆனால்.. நீங்கள் இப்படி பண்ணிடீங்களே.? விவேக்கிடம் அஜித் ரசிகர்கள் கேட்ட கேள்வி.!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் தல அஜித். இவர் நடிப்பு மட்டுமின்றி க

Advertisement

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் தல அஜித். இவர் நடிப்பு மட்டுமின்றி கார் ரேஸ், பைக் ரேஸ், ஏரோ மாடலிங் என பல்வேறு திறமைகளை கொண்டு விளங்குகிறார். இந்தநிலையில், தல அஜித் துப்பாக்கி சுடுதல் பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார். 

இதனையடுத்து ரைபிள் கிளப்பில் தீவிர துப்பாக்கி பயிற்சி எடுத்து வந்த நடிகர் அஜித் மாநில அளவிலான 46 வது துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இந்நிலையில் தல அஜித் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெறிக்கவிட்டு அவரை கொண்டாடி வருகின்றனர்.

இந்தநிலையில் அஜித் ரசிகர் ஒருவர் துணை முதல்வர், சீமான், காங்கிரஸ், பாஜக, திமுக பிரமுகர்கள் மற்றும் பல  திரைப்பட நடிகர்கள் தல அஜித் துப்பாக்கி சுடுதலில் 6 தங்கம் வென்று சாதனை படைத்ததற்கு பாராட்டி பதிவு செய்கிறார்கள், அஜித் உங்கள் நண்பர் நீங்கள் ஏன் பதிவிடவில்லை சார்? என கேள்வி எழுப்பியுள்ளார். 

அதற்கு பதிலளித்த நடிகர் விவேக், அவரது ட்விட்டர் பக்கத்தில், "நான் வட இந்தியாவில் படபிடிப்பில் உள்ளேன். தாமதமாக தெரிந்து கொண்டேன். அஜீத் எப்போதும் வித்தியாசமானவர் தான். மனம் நிறைந்த வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ajith #vivek
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story