×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்ட நடிகர் விவேக் உடல்.! கண்களை குளமாக்கும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக் சென்னை சாலிகிராமம் பத்மாவதி நகரில் உள்ள

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக் சென்னை சாலிகிராமம் பத்மாவதி நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது நேற்று காலை அவருக்கு திடீரென்று நெஞ்சுவலியும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. இதனையடுத்து குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மாரடைப்பு ஏற்பட்டு சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விவேக்குக்கு இதய செயல்பாடு குறைந்ததால், இதயத்தை முழுமையாக செயல்பட வைக்க எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 4.35 மணியளவில் நடிகர் விவேக் காலமானார். 

இதனையடுத்து நடிகர் விவேக்கின் உடல் விருகம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு நடிகர், நடிகைகள், திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vivek #died
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story