×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கடைசி வரை நிறைவேறாமலே போன நடிகர் விவேக்கின் நீண்ட நாள் ஆசை! வேதனையில் கண்கலங்கும் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி நகைச்சுவை நடிகராக இருக

Advertisement

தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் விவேக் நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில்,  இன்று காலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இவரது மறைவு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்பாராத இந்த இறப்பிற்கு மக்கள் அனைவரும் கண்ணீருடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பத்மஸ்ரீ, பிலிம்ஃபேர் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை குவித்த நடிகர் விவேக்கிற்கு திரை வாழ்க்கையில் நிறைவேறாத ஆசை ஒன்று உள்ளதாம்.

தமிழில் ரஜினி, அஜித், விஜய், விக்ரம், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ள விவேக் இதுவரை நடிகர் கமலுடன் இணைந்து நடிக்கவில்லையாம். மேலும் அவருக்கு கமலுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை இருந்துள்ளதாம். இந்த நிலையில் விவேக் இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணைந்து நடிப்பதாக இருந்தார். ஆனால் அந்த ஆசை நிறைவேறாமலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vivek #kamal
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story