×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நிமிடத்தில் சாதனை படைத்த தலையின் விசுவாசம் ட்ரைலர்! அலறவிடும் தல ரசிகர்கள்!

Visuvaasam trailer reached million views

Advertisement

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள படம் விசுவாசம். படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

படத்திற்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், இன்று மதியம் சரியாக 1.30 மணியளவில் விஸ்வாசம் படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியானது. இதையடுத்து, அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இந்த டிரெய்லரை கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து டிவிட்டரில் #Viswasamtrailer என்கிற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.

அதேசமயம் விசுவாசம் படத்தின் டிரெய்லர் வெளியாகி 12 நிமிடங்களில் இந்த வீடியோவை 10 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். 25 நிமிடங்களில் சுமார் 12 லட்சம் பேர் பார்த்துள்ளனர். எனவே, விஸ்வாசம் டிரெய்லர் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரெய்லரை பார்க்கும் போது விஸ்வாசம் படம் அஜித் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமையும் எனத் தெரிகிறது. விஸ்வாசம் படம் ஜனவரி 10ம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#visuvaasam #Viswasamtrailer #twitter
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story