×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஜோராக நடந்து முடிந்த விஷ்ணு விஷாலின் இரண்டாவது திருமணம்! வைரலாகும் கலக்கலான கல்யாண ஜோடியின் புகைப்படங்கள்!!

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமாகி, பின்னர் பல படங்களில் து தற்

Advertisement

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமாகி, பின்னர் பல படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருக்கும் விஷ்ணு விஷால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கே.நட்ராஜின் மகள் ரஜினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அதனைத் தொடர்ந்து விஷ்ணு விஷாலை பல நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கள் வெளிவந்த நிலையில், அவர் அண்மையில் பேட்மின்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டா என்பவரை காதலிப்பதாக தெரிவித்தார். மேலும் இருவரும் ஒன்றாக, நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் அவ்வப்போது வெளியானது. அதனை தொடர்ந்து இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும், ஏப்ரல் 22ஆம் தேதி திருமணம் எனவும் விஷ்ணு விஷால் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று விஷ்ணு விஷால் மற்றும் ஜுவாலா கட்டா திருமணம் கோலாகலமாக நிறைவடைந்துள்ளது. அவர்களுக்கு பல திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து கூறியுள்ளனர். இந்த நிலையில்  திருமண ஜோடியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vishnu vishal #marriage #Jwala katta
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story