×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரஜினிக்கு விவாகரத்து!. பிரபல நடிகரின் உருக்கமான பதிவு!

vishnu vishal got divorce

Advertisement


வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் விஷ்ணு விஷால். குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ராட்சசன் படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தினை அடுத்து நடிகர் விஷ்ணுவிற்கு  ஏராளமான பாராட்டுக்கள் குவிந்தன. 

நடிகர் விஷ்ணு விஷால், நடிகரும், இயக்குநருமான கே.நட்ராஜ் மகள் ரஜினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்ற ஒரு மகனும்  உள்ளார்.

இந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சில மாதங்களுக்கு முன்பு கோர்ட்டில் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்தனர். 



 

தற்போது அவர்களுக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உள்ளது. இதுகுறித்து விஷ்ணு விஷால் டுவிட்டரில் பரபரப்பான தகவலை வெளியிட்டார்.

அதில் அவர் கூறுகையில் நானும், ரஜினியும் ஒரு ஆண்டாக பிரிந்து வாழ்கிறோம். இப்போது எங்களுக்கு சட்டபூர்வமாக விவாகரத்து கிடைத்துள்ளது. எங்களுக்கு ஒரு அழகான ஆண் மகனும் உள்ளான்.

மகன் ஆர்யனுக்கு  நல்ல பெற்றோர்களாக இருப்பது எங்களின் முக்கிய கடமையாகும். அவனுக்கு நல்லதை செய்வோம். இனிமேலும் நல்ல நண்பர்களாக இருப்போம். ஒருவரையொருவர் மதிப்போம். 

எங்கள் மகன் மற்றும் இரு குடும்பங்களின் நலன் கருதி எங்களுடைய தனிப்பட்ட சுதந்திரத்துக்கு மதிப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#actor vishnu #vishnu vishal #divorce
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story