தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மார்க் ஆண்டனி படம் பார்த்தால், விவசாயிகளுக்கு உதவலாம்.. இதான் விஷயம்.. விஷால் அறிவிப்பு.!

ஒவ்வொரு டிக்கெட்டும் 1ரூபாய்.! நடிகர் விஷால் அதிரடி அறிவிப்பு.?

vishals-mark-antony-movie Advertisement

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஷால். இவர் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். சமீப காலமாக இவர் நடித்து வரும் திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவி வருகின்றன.

vishal

மேலும் சர்ச்சைகளில் சிக்கி வரும் விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் எஸ் ஜே சூர்யா, ரித்து வர்மா, அபிநயா, கிங்ஸ்லி போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

டைம் டிராவல் கதையை மையமாகக் கொண்ட 'மார்க் ஆண்டனி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. இது குறித்து விஷால் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் "மார்க்ஆண்டனி படத்தை தமிழ் ரசிகர்கள் மட்டுமல்ல பல மொழி ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் நீங்கள் கொடுத்த காசுக்கு மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.நான் உறுதியளித்தபடி ஒவ்வொரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு அளிப்பேன் என்று கூறியுள்ளார். இச்செய்தி இணையத்தில் பரவி வருகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vishal #Kollywood #cinema #Instagram #News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story