ஜஸ்ட் மிஸ்.! சில நொடிகளில் என் வாழ்க்கையை போயிருக்கும்.! விஷால் பகிர்ந்த ஷாக் வீடியோ.! பதறிய ரசிகர்கள்!!
ஜஸ்ட் மிஸ்.! சில நொடிகளில் என் வாழ்க்கையை போயிருக்கும்.! விஷால் பகிர்ந்த ஷாக் வீடியோ.! பதறிய ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் செல்லமே என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி, பின் ஏராளமான மாஸ், சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். அவரது நடிப்பில் அண்மையில் லத்தி, வீரமே வாகை சூடும் போன்ற படங்கள் வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது விஷால் நடித்து வரும் திரைப்படம் மார்க் ஆண்டனி.
இந்தப் படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்தில் ஹீரோயினாக ரித்து வர்மா நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் எஸ்ஜே சூர்யாவும் நடித்து வருகிறார். மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்று வரும் மார்க் ஆண்டனி படத்தின் ஷூட்டிங்கில் விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது லாரியை வைத்து சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்ட போது லாரி கட்டுபாட்டை இழந்து நேராக வந்து விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்நிலையில் விஷால் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடைபெற்ற விபத்து வீடியோவை பகிர்ந்து, சில நொடிகளில், சில இஞ்ச்களில் என் வாழ்க்கையை தவறவிட்டிருப்பேன். எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி. இந்த சம்பவத்தால் படப்பிடிப்பில் எனது கால்கள் மரத்து போனது என பதிவிட்டுள்ளது. அந்த வீடியோ வைரலாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.