தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

செம போங்க..விஷாலை திருமணம் செய்ய போகும் பெண் பிரபல நடிகையாம்! யார் அந்த நடிகை தெரியுமா?

நடிகர் விஷால் மற்றும் சாய் தன்ஷிகா திருமணம் செய்யவுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vishal sai dhanshika getting married Advertisement

விஷால் விரைவில் திருமணம் செய்ய உள்ளார்

நடிகர் விஷால் சமீபத்திய பேட்டியில், இன்னும் சில மாதங்களில் தன் திருமணம் நடைபெற இருப்பதாக உறுதிப்படையாக தெரிவித்துள்ளார். ஆனால், அவர் மணம் செய்ய உள்ள மணமகள் யார் என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை.

விஷால் திருமணம் செய்யவிருக்கும் நடிகை யார்

இந்த நேரத்தில், விஷால் திருமணம் செய்யவிருக்கும் பெண் நடிகை சாய் தன்ஷிகா என தகவல்கள் வலுவாக பரவி வருகின்றன. இது ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மயங்கி விழுவதற்கு முன் நடிகர் விஷால் என்ன கூறியுள்ளார்னு பார்த்தீங்களா! இந்த விஷயம் கார்த்திக்கு தான் முதலில் தெரியுமாம்!

சாய் தன்ஷிகா 

கபாலி, பேராண்மை, அரவான், பரதேசி உள்ளிட்ட பல முக்கியமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை தான் சாய் தன்ஷிகா. இவரது நடிப்பு திறமை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

காதலாக மாறிய நட்பு

விஷால் மற்றும் சாய் தன்ஷிகா பல வருடங்களாக நட்பில் இருந்து வருகின்றனர். சமீபத்திய தகவல்களின் அடிப்படையில், அந்த நட்பு காதலாக வளர்ந்துள்ளது என கூறப்படுகிறது.

 

விஷால் திருமணம்

திருமண தேதி குறித்து தகவல்கள்

நடிகர் சங்க கட்டிடம் திறக்கும் ஆகஸ்ட் மாத இறுதி அல்லது செப்டம்பர் மாதத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று இருவரும் அறிவிப்பு செய்ய வாய்ப்பு

இன்று மாலை நடைபெறும் யோகிடா திரைப்பட விழாவில், சாய் தன்ஷிகா கலந்துகொள்கிறார். இதில் சிறப்பு விருந்தினராக விஷால் வருகிறார். இந்த விழாவில், இருவரும் அதிகாரப்பூர்வமாக தங்கள் காதலும், திருமணமும் குறித்து அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: 42 கிலோ உடல் எடையை குறைத்த ரகசியத்தை ரசிகர்களுக்கு சொன்ன அஜித்! இப்படித்தான் என்று அவரே கூறியுள்ளார் பாருங்க...

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#விஷால் திருமணம் #sai dhanshika marriage #Tamil actor news #vishal love rumors #kollywood celebrity wedding
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story