×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாதியிலே நின்ற திருமணம்! புது காதலில் விழுந்த நடிகர் விஷால்! யார் அந்த பொண்ணு??

பாதியிலே நின்ற திருமணம்! புது காதலில் விழுந்த நடிகர் விஷால்! யார் அந்த பொண்ணு??

Advertisement

தமிழ் சினிமாவில் ஏராளமான ஆக்ஷன், மாஸ் திரைப்படங்களில் நடித்து முக்கிய நடிகர்களுள் ஒருவராகத் திகழ்பவர் விஷால். எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை ஏற்று சிறப்பாக நடிக்க கூடிய விஷால் நடிப்பில் சமீபகாலமாக வெளிவந்த படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறவில்லை. விஷால் தற்போது அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகும் லத்தி படத்தில் நடித்து வருகிறார்.

40 வயதை கடந்த நடிகர் விஷாலுக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு விஷால் நடிகை வரலட்சுமியை காதலிப்பதாகவும், இருவரும் பிரேக்கப் செய்துவிட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விஷால் ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா ரெட்டி என்பவரை காதலிப்பதாக அறிவித்தார்.

மேலும் இருவருக்கும் மிகவும் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்தபின் தங்களது திருமணம் நடைபெறும் என விஷால் அறிவித்திருந்தார். ஆனால் அதற்கிடையில் சில கருத்து வேறுபாட்டால் விஷால்- அனிஷா திருமணம் நிறுத்தப்பட்டு இருவரும் பிரிந்தனர்.

அதனைத் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நடிகர் விஷால் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது திருமணம் குறித்து பேசியுள்ளார். அப்பொழுது அவர், எனக்கு அப்பா, அம்மா பார்க்கிற பொண்ணு செட் ஆகாது. அதனால் நான் காதல் திருமணம்தான் செய்வேன். தற்போது ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன். அந்த பெண் யார்? என்பது குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vishal #Love #marriage
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story