நடிகர் விஷால் படத்தில் கதாநாயகியாகும் திரிஷா.. விரைவில் படப்பிடிப்பு ஆரம்பம்.!
vishal - direction in first movie - actor thrisha

நடிகை த்ரிஷா, விஷால் இயக்கும் முதல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகராக திகழும் நடிகர் விஷால் நடிப்பைத் தவிர நடிகர் சங்கத்தின் செயலாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளில் இருந்து வருகிறார்.
மேலும் விவசாயிகளின் நலன் சார்ந்த பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியின் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நாம் ஒருவர் என்ற சமூக நிகழ்ச்சியை மற்றவர்களுக்காக உதவும் உயர்ந்த நோக்கில் செய்துகொண்டிருக்கிறார்.
செல்லமே என்ற திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் விஷால் தற்போது 25 படங்களில் நடித்து முடித்துவிட்டார் இந்நிலையில் தெலுங்கு ரீமேக்கான அயோக்யா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
நடிப்பைத் தவிர திரைப்படம் இயக்குவதிலும் ஆர்வம் கொண்டுள்ள நடிகர் விஷால் விலங்குகளை மையப்படுத்தி ஒரு திரைப்படம் ஒன்றை எடுக்க திட்டமிட்டுள்ளார். மேலும், இந்த படத்தில் நடிகை திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
விலங்குகள் நல அமைப்பான பீட்டாவில் உறுப்பினராக நடிகை திரிஷா இருப்பதால் இப்படத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்றும் மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜனவரி மாதம் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.