×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விருமாண்டி உனக்கு வயசானாலும் மவுசு குறையல..! பொங்கலுக்கு படம் ரீ-ரிலிஸ்.! ட்ரெண்ட் ஆகும் ட்ரெயிலர்.!

விருமாண்டி திரைப்படம், வரும் ஜனவரி 14ம் தேதி முதல் அமேசான் பிரைம் தளத்தில் மீண்டும் திரையிடப்படுகிறது.

Advertisement

2004 ஆம் ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி படம் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்த திரைப்படம்தான், "விருமாண்டி". இந்த படத்தில் அபிராமி, பசுபதி, நெப்போலியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். விருமாண்டி படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருந்தார்.

இத்திரைப்படம் தென்கொரியாவில் நடைபெற்ற உலக திரைப்பட விழாவில் 2004 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆசிய திரைப்படம் என்ற விருதைப் பெற்றது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் என்றே கூறலாம்.

விருமாண்டி திரைப்படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆனநிலையில், வரும் ஜனவரி 14ம் தேதி முதல் அமேசான் பிரைம் தளத்தில் மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனையடுத்து ‘விருமாண்டி’ படத்தின் ட்ரெயிலர் யூடியூப்பில் வெளியானது. தற்போது இந்த ட்ரெயிலர், பல லட்சம் பார்வைகளை கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் முன்னிலையில் உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#virumandi
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story