×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சின்னக்கவுண்டர், வேட்டைக்காரன் பட வில்லன் நடிகர் காலமானார்! திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்!!

சின்னக்கவுண்டர், வேட்டைக்காரன் பட வில்லன் நடிகர் காலமானார்! திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்!!

Advertisement

ஹிந்தியில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்வர்க் நராக் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் சலீம் கவுஸ். சென்னையில் பிறந்து, சினிமா சம்பந்தப்பட்ட படிப்பைப் படித்த அவர் தமிழில் வெற்றிவிழா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் சின்னக்கவுண்டர், தர்மசீலன், திருடா திருடா, சீமான், ரெட், தாஸ், சாணக்யா, வேட்டைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

மிரட்டலான வில்லனாக வலம் வந்த நடிகர் சலீம் கவுஸ் தமிழ்,மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என எல்லா மொழிகளிலும் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் சின்னத்திரையிலும் சில தொடர்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், மும்பையில் வசித்து வரும் 70 வயது நிறைந்த சலீம் கவுஸ் உடல்நலக் குறைவு ஏற்பட்டு காலமானார். அவரது மறைவு திரையுலகத்தினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவரது மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Villain #Salim ghouse #dead
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story