×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சூப்பர் ஸ்டார் ஒருத்தர்தான், தல ஒருத்தர்தான்! ஆனால் தளபதின்னா.. லியோ வெற்றி மேடையில் விஜய் பரபரப்பு பேச்சு.!

சூப்பர் ஸ்டார் ஒருத்தர்தான், தல ஒருத்தர்தான்! ஆனால் தளபதின்னா.. லியோ வெற்றி மேடையில் விஜய் பரபரப்பு பேச்சு.!

Advertisement

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் லியோ. இத்திரைப்படத்தில் திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வசூல் ரீதியாகவும்,  விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சாதனை படைத்த லியோ படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் லியோ பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். வெற்றி விழாவில் மேடை ஏறிய தளபதி விஜய் நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தார். மேலும் வழக்கம் போல குட்டி ஸ்டோரி ஒன்றை கூறி அரங்கத்தை அதிர வைத்தார். அதுமட்டுமின்றி அரசியல் வருகை குறித்து சூசகமாக தகவல் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, புரட்சித் தலைவர் ஒருத்தர்தான், நடிகர் திலகம் ஒருத்தர்தான், புரட்சிக் கலைஞர் ஒருத்தர்தான் அதேபோல 
உலக நாயகன் ஒருத்தர்தான், சூப்பர் ஸ்டார் ஒருத்தர்தான், தல ஒருத்தர்தான்.. தளபதி என்றால், மன்னர்கள் சொல்வதை செய்து முடிப்பவன். எனக்கு மன்னர்கள் நீங்கள்தான். நீங்கள் சொல்லுங்கள் அதை நான் செய்து முடிக்கிறேன் என கூறியுள்ளார்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay #thalapathi #Leo
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story