×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இது மட்டும் உண்மைனா அடுத்த விஜய் படம் செம மாஸ்தான்... தளபதி 65 படத்தின் நாயகி மற்றும் வில்லன் யார் தெரியுமா?

தளபதி 65 படம் குறித்தும், படத்தின் வில்லன் மற்றும் நாயகி குறித்தும் பல்வேறு தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Advertisement

தளபதி 65 படம் குறித்தும், படத்தின் வில்லன் மற்றும் நாயகி குறித்தும் பல்வேறு தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். கொரோனா ஊரடங்கு காரணமாக படம் திரையரங்குகளில் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாஸ்டர் படத்தை அடுத்து விஜய் எந்த இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

முன்னதாக விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அந்த படத்தில் இருந்து இயக்குனர் முருகதாஸ் விலகியதால் விஜயின் அடுத்த படத்தை இயக்க இருப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே SJ சூர்யா, பேரரசு, ஹரி போன்றோரின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க, படத்தில் விஜய்க்கு ஜோடி யார், வில்லன் யார் என்று புது தகவல் ஒன்று வைரலாகிவருகிறது. அதில், முதல் முறையாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோனே விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும், ஜான் ஆபிரகாம் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தளபதி 65 படம் குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரபூர்வ தகவல்களும் வெளிவராதநிலையில் தற்போது இந்த தகவல் தான் கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாகியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Thalapathi 65 #vijay #master #deepika padukone
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story