தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரஜினி - கமல் இருவரும் நடிகர் சங்க தேர்தலை கூட சந்தித்தது இல்லை..! இவர்கள் எப்படி.? விஜயகாந்த் மகன் பரபரப்பு பேச்சு.!

Vijayakanth son talks about rajini and kamal

Vijayakanth son talks about rajini and kamal Advertisement

ரஜினி - கமல் இருவரும் இணைந்து நடிகர் சங்க தேர்தலை கூட சந்தித்தது இல்லை, இவர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்பதும் கேள்வி குறியாக உள்ளது என தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த மணப்பாக்கத்தில் சென்னை தெற்கு மாவட்டம் ஆலந்தூர் மேற்கு பகுதி தேமுதிக சார்பில் தேமுதிக கொடி நாள் விழா நடந்தது. இதில் கலந்துகொண்ட விஜய பிரபாகரன், மாற்றுதிறனாளிகளுக்கு இலவச சைக்கிள், பெண்களுக்கு தையல் மிஷன், இஸ்திரி பெட்டிகள், ஹெல்மட், புடவைகளை வழங்கினார்.

vijayakanth

பின்னர் மேடையில் பேசிய அவர், விஜயகாந்த் மீண்டும் வருவார் என்றும், 2021 சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்தின் வருகை ஒரு புரட்சியை ஏற்படுத்தும் எனவும் பேசினார். மேலும், ரஜினி - கமல் குறித்து பேசிய விஜய பிரபாகரன், இவர்கள் இருவரும்  நடிகர் சங்க தேர்தலில் தனித்தோ, இணைந்தோ சந்திக்கவே இல்லை.

அதுப்போல் தேர்தலில் நடிகர்கள் யார் வேண்டுமானாலும் வந்து ஜெயிக்கலாம். ஆனால் நல்ல மக்களுக்கு ஏதாவது செய்திருக்க வேண்டும். ஆனால், இவர்கள் இருவரும் மக்களுக்கு இதுவரை என்ன செய்தார்கள் என்பதே கேள்விக்குறியாக உள்ளதாக பேசியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijayakanth #rajini #kamal
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story