×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடேங்கப்பா.. கேப்டன் எப்பவுமே கெத்துதான்! குடும்பத்துடன் கொண்டாட்டத்தில் நடிகர் விஜயகாந்த்! வைரலாகும் புகைப்படங்கள்!!

அடேங்கப்பா.. கேப்டன் எப்பவுமே கெத்துதான்! குடும்பத்துடன் கொண்டாட்டத்தில் நடிகர் விஜயகாந்த்! வைரலாகும் புகைப்படங்கள்!!

Advertisement

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வந்தவர் விஜயகாந்த். நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றிருந்த அவரை ரசிகர்கள் பாசமாக கேப்டன் என அழைத்து வந்தனர். டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்த அவர் சமூக நலம் மற்றும் தேசப்பற்று கொண்டு ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். 

ஒரு காலத்தில் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த விஜயகாந்த் திடீரென அரசியலில் தனது கவனத்தை செலுத்தினார். பின்னர் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டார். அதனைத் தொடர்ந்து அவர் முழு நேரமும் அரசியலில் நேரத்தை செலவிட்டு வந்தார். ஆனால் சில காலங்களாக அவரது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் காரணத்தால்  அவரால் தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை. மேலும் நடிகர் விஜயகாந்த் சரியாக பேச முடியாமல், அடுத்தவர் துணையின்றி நடக்க முடியாமல் கஷ்டப்படுவதாகவும் தகவல்கள் வெளிவந்தது.

இந்நிலையில் விஜயகாந்த் தற்போது தனது இளைய மகன் சண்முக பாண்டியனின் பிறந்தநாளை குடும்பத்துடன் கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட ரசிகர்கள் கேப்டன் இப்பவும் கெத்தாக இருப்பதாக கூறி வருகின்றனர்.

    

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijayakanth #Sanmugapandian #birthday
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story