×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நன்றிதான் இல்ல.. உதவி செய்த விஜயகாந்த் மீது அக்கறையும் இல்லையா?.. தளபதி விஜயிடம் கேள்வி எழுப்பும் ரசிகர்கள்.! 

நன்றிதான் இல்ல.. உதவி செய்த விஜயகாந்த் மீது சிறிதும் அக்கறை இல்லையா?.. தளபதி விஜயிடம் கேள்வி எழுப்பும் ரசிகர்கள்.! 

Advertisement

 

தமிழ் திரையுலகின் கருப்பு எம்ஜிஆர், புரட்சி கலைஞர், கேப்டன் என்று பல பெயர்களால் அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். இவரால் வாழ்ந்த பல திரைப்பட கலைஞர்களின் குடும்பங்கள் ஏராளம். விஜயகாந்தின் திரையுலக பயணம் பல கஷ்டங்களுக்கு நடுவில் போராட்டங்களுக்கு பின் கை கூடியது. 

அதேபோல திரையுலகில் வளர்ந்து வந்த பின்னும், கடைநிலை தொழிலாளி வரை அனைவருக்கும் சரிசமமாக போராடி பல குடும்பங்களில் இன்றளவும் மூன்று வேளை உணவுக்கு முக்கிய காரணமாக இருந்து வந்தவர். 

அவரின் அரசியல் பயணத்திற்கு பின் எழுச்சி, வீழ்ச்சி என பல பிரச்சனை இருந்தாலும் திரைப்படத் துறையில் பணியாற்றும் போது தனது இறுதிகட்ட காலங்களில் அந்த சமயம் அறிமுகமான புதுமுக நடிகர்களான சூர்யா, விஜய் என பலரின் உச்சகட்ட வாழ்க்கைக்கு தன்னலமின்றி பொதுநலத்தோடு உதவி செய்தவர்.

தற்போது உடல்நல குறைவால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் பூரணநலம் பெற வேண்டி நடிகர் சூர்யா உட்பட பலரும் தங்களது பிரார்த்தனையை பதிவு செய்திருந்தனர். ஆனால் தளபதி விஜய் அது தொடர்பான எந்த பதிவும் இடாததால் இது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest news #cinema news #சினிமா செய்திகள் #நடிகர் விஜயகாந்த் #நடிகர் விஜய் #actor vijay
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story