×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இவ்வளவு வயதாகியும் குழந்தை பெற்றுக் கொள்ளாதது ஏன்? ரகசியத்தை போட்டுடைத்த நடிகை விஜயசாந்தி .!

vijaya shanthi said about baby in political meeting

Advertisement

சினிமா உலகில் நயன்தாராவிற்கு முன்பு தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டவர் நடிகை விஜயசாந்தி. இவர் ஏராளமான ஆக்சன் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகர்களுக்கு இணையாக சண்டைக்காட்சிகளில் மிரட்டியுள்ளார்.

இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம்,தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். இவரது படத்திற்கெனவே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் அவர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியலில் ஈடுபட்டார்.

முதலில் 1988 இல் பாஜக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட விஜயசாந்தி பின்னர் விலகி 2004 ல் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி விஜயசாந்தியை தெலுங்கானா மாநிலத்தின் ஸ்டார் பிரச்சாரகராக நியமனம் செய்தார் 

அதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக தற்போது பிரச்சாரக் கூட்டங்களில் ஈடுபட்டுவரும் விஜயசாந்தி சமீபத்தில் தெலுங்கானாவில் அரசியல் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார் 

அப்பொழுது பேசிய அவரிடம்  50 வயது ஆன நிலையிலும் ஏன் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என கேள்வி எழுப்பியதற்கு, தெலுங்கானா மக்கள் தான் என் குழந்தைகள் அவர்களுக்கு பணி செய்யவே நான் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என கூறியுள்ளார். இதனைக் கேட்டு தெலுங்கானா மக்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijayashanthi #telungaa #baby
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story