×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தளபதி விஜய்யுடன் வேற லெவலில் வனிதா! இதுவரை யாரும் பார்த்திராத அரிய புகைப்படங்கள்! ஷாக்கான ரசிகர்கள்!

நடிகை வனிதா சந்திரலேகா படத்தில் விஜய்யுடன் நடித்த போது எடுத்த அரிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் வனிதாவா இது என ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

Advertisement

தமிழ் சினிமாவில் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா. அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களிலேயே நடித்த அவர் தொடர்ந்து ஏராளமான சர்ச்சைகளில் சிக்கினார். இந்த நிலையில் வனிதா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

 இந்த நிகழ்ச்சியில் மோசமான விமர்சனங்களை பெற்று வந்த அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் வின்னரானார். இந்நிலையில் அவர் கடந்த ஆண்டு பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டு சமூக வலைதளங்களில் பேசுப்பொருளானார். மேலும் அதற்கேற்றார்போல் திருமணமான மூன்று மாதங்களிலேயே அவர்  பீட்டர் பாலை  விவாகரத்து செய்தார்.

இந்த நிலையில் வனிதா  தற்போது பாம்பு சட்டை படத்தை இயக்கிய ஆதம்தாசனின் அனல் காற்று என்ற புதிய படத்தில் மீண்டும் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். இந்த நிலையில் வனிதா தனது இன்ஸ்டாகிராமில் சந்திரலேகா படத்தில் தான் விஜய்யுடன் நடித்த போது எடுத்த அரிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் வனிதாவா இது என ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vanitha #vijay
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story