×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நிறைமாத கர்ப்பிணியான ஆலியாவிற்கு காத்திருந்த பயங்கர சர்ப்ரைஸ்! இன்பஅதிர்ச்சியில் கண்கலங்கிய ஆலியா! வைரலாகும் வீடியோ!

vijay tv surpraised aliyaa manasa

Advertisement

பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜாராணி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர்கள் ஆல்யா மானசா-சஞ்சீவ். கார்த்திக், செண்பா என்ற கதாபாத்திரத்தில் கணவன் மனைவியாக நடித்த இவர்கள் ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தனர். மேலும் சீரியலில் மட்டுமின்றி நிஜத்திலும் காதலிக்க ஆரம்பித்தனர்.

அதனை தொடர்ந்து இருவரின் திருமணம் எப்பொழுது என திருமணம் ரசிகர்கள் எதிர்பார்த்துவந்த நிலையில் அவர்கள் இருவரும் எவருக்கும் சொல்லாமல், ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். பின்னர் திரைபிரபலங்கள் பலரும் கலந்துகொள்ள வரவேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.


அதனை தொடர்ந்து ஆலியா மானசா தற்போது கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் அவருக்கு சமீபத்தில்தான் அவரது குடும்பத்தினர்கள் கோலாகலமாக வளைகாப்பு நடத்தி வைத்தனர். ஆலியா மானசா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டான்சிங் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார்.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி, நிறைமாத கர்ப்பிணியான ஆலியா மானஸாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. அதில் சஞ்சய் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay tv #surprise #Aliya Manasa
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story