×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அந்த நபரால்...விஜய் டிவி விருது விழாவில் மேடையிலேயே கதறியழுத பிரபலங்கள்! கண்கலங்க வைத்த வீடியோ!!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஆண்டும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்த

Advertisement

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஆண்டும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரையும் பெருமைப்படுத்தி கௌரவிக்கும் வகையில் விஜய் தொலைக்காட்சி விருதுகள் வழங்கப்படும். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் விழாவும் அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி டிவியில் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

இந்த விருது வழங்கும் விழாவில் பிரபல சின்னத்திரை நடிகையான விஜே சித்ராவிற்கு மக்களின் நாயகி என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக களமிறங்கி, தனது திறமையால் முன்னேறி ஏராளமான தொடர்களில் நடித்து பிரபலமானவர் விஜே சித்ரா. 

 இவர் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை பெருமளவில் கவர்ந்தார். மேலும் அந்த தொடரை தொடர்ந்து அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இந்த நிலையில் சித்ரா கடந்த டிசம்பர் மாதம் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மறைந்த பின்பும் மக்களின் நாயகியாக வாழும் அவருக்கு விஜய் டிவியில் விருது வழங்கப்பட்டுள்ளது.  இந்த விருதினை வாங்க சித்ரா தற்போது உயிரோடு இல்லையே என நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் பலரும் கண்கலங்கியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay tv #award #chitra
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story