ராணுவ வீரரிடம் நடிகர் விஜய் என்ன பேசினார்? வெளியான பரபரப்பு வீடியோ!
Vijay talks with army fan video goes viral

இந்திய CRPF வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதி ஒருவன் நடத்திய வெடிகுண்டு தாக்குதல், இந்திய போர் விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ஆர்மியிடம் சிக்கிக்கொண்டது என இந்தியா முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதனால் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய போர் விமானி அபிநந்தனை நேற்று இரவு இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைத்தது இரண்டு நாடுகளுக்கும் இடையே சற்று அமைதியான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் தமிழ்செல்வனுடன் நடிகர் விஜய் போன் மூலம் நலம் விசாரித்தது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எந்தவொரு விளம்பரமுமின்றி நிகழ்ந்த ராணுவ வீரருக்கிடையேயான விஜய்யின் இந்த உரையாடல் தற்போது வெளியாகியுள்ளது.