×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விஜய் பேசிய வார்த்தை.. சர்ச்சையான லியோ ட்ரெய்லர் என்ன காரணம்.?

விஜய் பேசிய வார்த்தை.. சர்ச்சையான லியோ ட்ரெய்லர் என்ன காரணம்.?

Advertisement

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம், கைதி, மாஸ்டர் விக்ரம் போன்ற பல வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது விஜய் நடிப்பில் 'லியோ' திரைப்படத்தை இயக்குகிறார்.

இப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தொடர்ந்து பலவிதமான சர்ச்சையில் சிக்கி வருகிறது. இதன்படி சமீபத்தில் 'லியோ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அரசியல் காரணங்களால் ரத்தானது என்று பேசப்பட்டது.

தற்போது 'லியோ' திரைப்படத்தின் டிரெய்லர் பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த டிரெய்லரில் விஜய் கெட்ட வார்த்தை பேசியதாக நெட்டிசன்கள் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.

இவ்ளோ பெரிய ஹீரோ எப்படி இந்த வார்த்தையை பேசலாம் என்று பலர் இணையத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். இவ்வாறு தொடர்ந்து 'லியோ' படம் சர்ச்சையில் சிக்கி வருவதால் படம் வெளியாகுமா இல்லையா என்று ரசிகர்கள் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Leo #trailer #Viral #News #vijay
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story