×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காரில் நண்பர்களுடன் செம ஜாலியாக விஜய்யின் மகன் செய்த காரியத்தை பார்த்தீர்களா! தீயாய் பரவும் வீடியோ!!

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர்

Advertisement

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் விஜய். அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு அண்மையில் ஜார்ஜியாவில் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் இரண்டாவது அலையாக தீவிரமாக பரவி வரும் நிலையில் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி 
 வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்க்கு கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா ஷாஷா என்ற மகளும் உள்ளனர். 
தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் திரைப்பட கல்லூரியில் படித்துள்ளார். அவர் விரைவில் தமிழ் திரையுலகில் டைரக்டராகவோ அல்லது நடிகராகவோ அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சஞ்சய் மற்றும் விஜய்யின் மகள் திவ்யா குறித்த வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். தற்போது சஞ்சய் காரில் நண்பர்களுடன் செம ஜாலியாக தனது தந்தையின் பாடலுக்கு நடனமாடி சென்ற வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதனை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வைரலாக்கி வருகின்றனர்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay #sanjay #car ride
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story