புலிக்கு பிறந்தது பூனையாகுமா? ஓடுறது தளபதி ரத்தம்ல.. இணையத்தை கலக்கும் விஜய் மகனின் செம மாஸ் வீடியோ!!
vijay son dance video viral

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றித் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பார்ப்பவர் தளபதி விஜய். மேலும் அவருக்கு என உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.
அதுமட்டுமின்றி அவருக்கென ரசிகர் மன்றங்கள், மக்கள் மன்றம் என பல அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. மேலும் அதன் மூலம் ரசிகர்கள் மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகின்றனர். தளபதி விஜய்யின் படங்கள் வெளியாகும் நாட்களை திருவிழாக்களை போல கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் இணைந்து மூன்றாவது முறையாக உருவாகியுள்ள படம் பிகில். இப்படம் தீபாவளியன்று ரிலீசாகிறது என அறிவிப்பு வெளிவந்தநிலையில் படம் வெளியாகும் நாட்களை ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
விஜய்க்கு நடிகர் விஜய்க்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா ஷா என்ற மகளும் உள்ளனர். சஞ்சய்ஒரு சில குறும்படங்களில் நடித்துள்ளார், அவை சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது சஞ்சய் அவரது நண்பர் ஒருவருக்கு நடனம் சொல்லிக்கொடுக்கும் விடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் புலிக்கு பிறந்தது பூனையாகுமா, ஓடுறது தளபதி இரத்தம்ல அதான் கால் இப்படி ஆடுது என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.