×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட.. நம்ம தளபதியோட மச்சினிச்சியை பார்த்தீங்களா! அப்படியே அக்கா மாதிரியே இருக்காரே! வைரல் புகைப்படங்கள்!!

அட.. நம்ம தளபதியோட மச்சினிச்சியை பார்த்தீங்களா! அப்படியே அக்கா மாதிரியே இருக்காரே! வைரல் புகைப்படங்கள்!#

Advertisement

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக, தளபதியாக  கொடிகட்டி பறப்பவர் நடிகர் விஜய். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. விஜய் கடைசியாக பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் தற்போது தனது 66 படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் விஜய் கடந்த 1999ம் ஆண்டு லண்டனை சேர்ந்த தொழிலதிபர் சொர்ணலிங்கம் என்பவரது மூத்த மகளான சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா ஷாஷா என்ற மகளும் உள்ளனர். சஞ்சய் கனடாவில் திரைப்பட கல்லூரியில் படித்துள்ளார். அவர் விரைவில் நடிகராகவோ அல்லது இயக்குனராகவோ திரையுலகில் காலடி எடுத்து வைக்கலாம்  என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் அவர் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் எதுவாக இருந்தாலும் அதனை பெருமளவில் வைரலாக்குவர். இந்த நிலையில் விஜய் அவரது குடும்பத்தினருடன் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. அதில் சங்கீதாவுடன் இருப்பவர் அவரது சகோதரி பிரதீபாவாம். இருவரும் பார்ப்பதற்கு ஒரேமாதிரியாக உள்ளனர். அவர் லண்டனில் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார் என கூறப்படுகிறது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay #Sangeetha #Sister in law
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story